மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் சிலையை திருவண்ணாமலை வேங்கைகால் பகுதியில் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிக தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
பட்டா நிலத்துடன் பொது இடத்தை ஆக்கிரமித்தது அது மட்டும்மில்லாமல் கிரிவலப் பாதை மற்றும் நெடுஞ்சாலையை இணைக்கும் இடத்தில் கருணாநிதி சிலை வைக்க ஏற்பாடு செய்யப் படுவதால் அதனை அனுமதிக்க கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில் வேங்கைகால் பகுதியில் கருணாநிதி சிலையை வைக்க தற்காலிக தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் சிலை வைக்கும் இடத்தை ஆய்வு செய்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. அதேசமயம் தமிழக அரசு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், அமைச்சர் எ.வ.வேலு, ஜீவா கல்வி அறக்கட்டளை பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.