நடிகர் கார்த்தியின் ‘கைதி’ திரைப்படம் ரஷ்யாவில் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமானது. ஒரே நேரத்தில், விஜய்யின் ‘பிகில்’ படத்துடன் மோதி பிகிலை பின்னுக்குத் தள்ளி வசூலைக் குவித்தது. நடிப்பில் மிரட்டியிருந்தார் கார்த்தி. இப்படத்தின் வெற்றி லோகேஷ் கனகராஜுக்கு ‘மாஸ்டர்’ படத்தினை இயக்கும் வாய்ப்பை அளித்தது. அந்தளவுக்கு, கார்த்திக்கும் சரி… லோகேஷுக்கும் கைதி முக்கியமானப் படம்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயரித்த இப்படத்தில் நரேன், பேபி மோனிகா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தமிழகத்தில் வெறித்தனமான ஹிட் அடித்த கைதி இன்று ரஷ்யாவில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நாயகி கிடையாது, பாடல்கள் கிடையாது உள்ளிட்ட பல புதுமையான விஷயங்கள் கையாளப்பட்டது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ‘கைதி’ மாபெரும் வரவேற்பைப் பெற்றதோடு, தற்போது அஜய் தேவ்கன் நடிப்பில் ‘போலா’ என்ற பெயரில் இந்தியிலு பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. இதனை ட்ரீம் வாரியர் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம், டி-சீரிஸ் நிறுவனம் மற்றும் அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்து வருகின்றனர். தற்போது, மேலும் ஒரு மைல்கல்லாக ரஷ்யாவில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகியுள்ளது ‘கைதி’. ‘உஸ்னிக்’ என்ற பெயரில் சுமார் 121 நகரங்களில் 297 திரையரங்குகளில் வெளியாகிவுள்ளது.