மீன ராசியில் உருவாகும் திரிகிரஹி யோகம்! அதிர்ஷ்டம் அள்ளப்போகும் மூன்று ராசிக்காரர்கள் இவர்கள் தான்.. உங்கள் ராசியும் இருக்கா?



2022 மே 17 ஆம் திகதி செவ்வாய் கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு சென்றார். இந்த மீன ராசியில் ஏற்கனவே குரு பகவான் பயணித்து வருகிறார்.

அதோடு சுக்கிரனும் மீன ராசியில் தான் பயணித்து வருகிறார்.

தற்போது இந்த மீன ராசியில் குரு, சுக்கிரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் சேர்ந்திருப்பதால், திரிகிரஹி யோகம் உருவாகியுள்ளது.

இந்த யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் அதிக நன்மைகளைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசியில் சுக்கிரன் நன்மை தரும் இடத்தில் உள்ளார். தற்போது திரிகிரஹி யோகம் மீன ராசியில் உருவாகியிருப்பதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான காலமாகும். இக்காலத்தில் உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.

எந்த ஒரு காரியத்தை தொடங்க நினைத்தாலும், அதில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு வலுவடையும் மற்றும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உத்தியோகத்தில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். காதல் விஷயங்களில் அலட்சியமாக இருப்பீர்கள்.

மிதுனம்

மீனத்தில் உருவாகியுள்ள திரிகிரஹி யோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் மற்றும் வணிகம் செழித்திருக்கும். மூதாதையர் சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு இது சாதகமான காலமாக இருக்கம்.

சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வருமானம் பெருகும். நீண்ட நாட்களாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு.


விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு மீன ராசியில் உருவாகியுள்ள திரிகிரஹி யோகத்தால் லாபகரமான சூழ்நிலையாக மாறுவதற்கான வாய்ப்புக்கள் உருவாகும். திடீர் பண வரவால் நிதி நிலை வலுவாகும். இக்காலத்தில் மகிழ்ச்சியும், ஆடம்பரமும் அதிகரிக்கும். புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கம்.

பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு வலுவாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட அனுமதித்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் உறவு பாதிக்கப்படும். முக்கியமாக எப்பேற்பட்ட கடினமான சூழ்நிலைகளையும் எளிதாக சமாளிப்பீர்கள்.

  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.