பல தசாப்தங்களில் வெளிநாட்டு கடனைத் திருப்பிச் செலுத்தாத முதல் ஆசிய-பசிபிக் நாடாக இலங்கை இன்று உத்தியோகபூர்வமாக மாறியுள்ளது.
வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை நாடு தவறவிட்டதை இலங்கையின் மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது.
அதற்கமைய, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்த நூற்றாண்டின் முதல் வெளிநாட்டு கடனை திருப்பிச் செலுத்தாத நாடு என இலங்கை பெயரிடப்பட்டுள்ளதாக மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டு சர்வதேச இறையாண்மைப் பத்திரங்கள் மீதான வட்டிக் கொடுப்பனவுகளுக்கான 30 நாள் கால அவகாசம் நேற்றைய தினம் காலாவதியானது.
நாடு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த நிலைமை மேலும் கடுமையாக்கும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பட்டியலில் இதற்கு முன்னர் 1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் இடம்பெற்றிருந்ததென மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.