உலகை அச்சுறுத்திவரும் குரங்கு அம்மை நோய் பாலியல் உறவால் அதிகம் பரவ வாய்ப்பு இருப்பதாக ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குரங்கு அம்மை நோய் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலில் 40-க்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. கனடாவில் 12 பேருக்கும், பிரிட்டனில் 9 பேருக்கும், அமெரிக்காவில் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு பாலியல் உறவால்தான் தொற்று பரவியிருப்பதாக அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்திருக்கிறது.
அதேபோல் பிரிட்டன் சுகாதாரத்துறையும், ஆணுடன் ஆண் பாலியல் உறவு கொள்பவர்களிடையே தொற்று அதிகம் பரவியிருப்பதை உறுதிசெய்திருக்கிறது. பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய சுகாதாரத்துறை அதிகாரிகளும் இதனை உறுதி செய்துள்ளனர்.
தன்பாலின சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கும், இருபாலின சேர்க்கை பழக்கமுடையவர்களிடையே தொற்று அதிகம் பரவியிருப்பதாக உலக சுகாதார நிறுவனமும் தெரிவித்திருந்தது.
மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் கடந்த சில ஆண்டுகளில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சில வாரங்களில் குணமடைந்துள்ளனர். மிகச்சிலரே உயிரிழந்தனர்.
குரங்கு அம்மை நோய் முதலில் காய்ச்சல், தசை வலி மற்றும் கணுக்கால் வீக்கம் என ஆரம்பித்து பின்னர் முகம் மற்றும் உடலில் அம்மை போன்று தடிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
newstm.in