இலங்கையில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிகள் தணியும் என்றும், இதனால் பிணைமுறிகளின் பெறுமதி அதிகரிக்கும் எனறும் அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு வங்கிகளில் ஒன்றான ஜே பி மோகன் தெரிவித்துள்ளது.
அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாக பிணைமுறி தொடர்பாக தற்போது காணப்படுகின்ற நிலையை விட உயர்வுக்கு வழிவகுக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் மற்றும் சட்ட மற்றும் நிதி ஆலோசகர்களை நியமிக்கும் செயல்முறையை எளிதாக்கும் என்று வங்கி கணித்துள்ளது.
இதேவேளை, மீளச் செலுத்தப்பட வேண்டிய வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (18) தெரிவித்துள்ளார்.