கீவ்: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடரும் நிலையில் உக்ரைன் நாட்டு வீரர்கள் 1,730 பேர் ரஷ்யாவிடம் சரண் அடைந்துள்ளதாக அந்நாட்டின் ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.
கிழக்கு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அங்குள்ள மரியுபோல் நகரின் இரும்பாலையை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டது. இரும்பாலையில் பதுங்கி இருந்த 2000க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் ரஷ்யா படைகளிடம் சண்டையிட்டு வந்தனர்.
இந்நிலையில் இரும்பாலையில் பதுங்கியிருந்த உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவிடம் சரணடைந்து வருவதாக அந்நாட்டின் ராணுவ அமைச்சகம் அறிவித்தது. இதுவரை 1,730 உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவிடம் சரண் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையடுத்து மரியுபோல் மற்றும் இரும்பாலை முழுவதும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக அந்நாட்டின் ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.
கீவ்: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடரும் நிலையில் உக்ரைன் நாட்டு வீரர்கள் 1,730 பேர் ரஷ்யாவிடம் சரண் அடைந்துள்ளதாக அந்நாட்டின் ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது. nsimg3033429nsimg கிழக்கு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.