கொரோனா கால கொண்டாட்டங்கள் தொடர்பாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு இனி புதிய அபராதங்கள் விதிக்கப்படாது என பிரித்தானியாவின் காவல்துறை தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு விதிகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடத்தியது தொடர்பாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததோடு அவர் மீதும் அவரது மனைவி கேரி மீதும் பிரித்தானிய காவல்துறை அபராதங்களை விதித்தது.
மேலும் இது தொடர்பாக டவுனிங் தெரு மற்றும் ஒயிட்ஹால் பகுதியில் விசாரணை நடைப்பெற்று வந்த நிலையில், பிரித்தானிய பிரதமர் மற்றும் அவரது மனைவி மீது கூடுதலான அபராதங்கள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில், கொரோனா காலத்து கொண்டாட்டங்கள் தொடர்பான முழு விசாரணையையும் பிரித்தானிய காவல்துறை நிறைவு செய்துள்ளது.
மேலும் இந்த விசாரணையின் போது கொரொனா காலத்து விதிமுறைகளை மீறியதற்காக 126 அபராதங்களை நடத்தப்பட்ட 12 கொண்டங்களில் கலந்து கொண்டவர்கள் மீது பிரித்தானிய காவல்துறை அறிவித்து இருந்தது.
இதில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனும் அவரது மனைவியும் இடம்பெற்றிருந்த நிலையில், அவர்கள் மீது கூடுதல் அபராதங்கள் விதிக்கப்படாது என பிரித்தானியாவின் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆனால் பிரித்தானிய பிரதமரின் மனைவி கேரியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அமைச்சரவை செயலாளர் சைமன் கேஸ் மீது இதுவரை எத்தகைய அபராதமும் விதிக்கப்படாத நிலையில் அவர் மீது புதிய அபராதங்கள் விதிக்கப்படுமா என தெளிவாக தெரியவில்லை.
கூடுதல் செய்திகளுக்கு: ஐரோப்பிய நாடுகளின் இரண்டாம் தர பார்வை…உக்ரைனை காயப்படுத்துகிறது: டிமிட்ரோ குலேபா கவலை
அத்துடன் கொண்டாடங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் புகைப்படம், வீடியோ அகியவற்றை உள்ளடக்கிய முழு அறிக்கையும் அடுத்த வாரம் வெளியுடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.