விசேட தேவையுடையவர்கள் எவ்வித அசௌகரியமும் இன்றி தேவையான சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் சம்பந்தப்பட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து விசேட தேவையுடையவர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, எரிபொருள், உணவுப் பொருட்கள், சுகாதார சேவைகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் விசேட தேவையுடைய இவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு உரிய அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.