இலங்கை பாமாயில் உற்பத்திக்கு இந்தியா ஒத்துழைப்பு

இலங்கை பாமாயில் உற்பத்திக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது.

இலங்கை பாமாயில் உற்பத்தியாளர் ஏற்றுமதி சங்க (Palm Oil Industry Association of Sri Lanka) உயர்மட்டக் குழு , இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை அண்மையில் சந்தித்தது.

இந்திய இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கையில் மரக்கறி எண்ணெய் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் , இலங்கையில் மரக்கறி எண்ணெய் வரலாறுவரலாறு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது தொழில் துறையின் வளர்ச்சியை வெளிக்காட்டும் புள்ளிவிபரவியல் பகுப்பாய்வுகளும் நடைபெற்றது.

இதன்போது ,இந்தியாவில் மரக்கறி எண்ணெய் தொழில் துறையின் வெற்றியைக் குறிப்பிட்டஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் , தேசிய சமையல் எண்ணெய் வேலைத்திட்டம் – Oil Palm (NEOM-OP) இன் கீழ் குறிப்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்பார்த்தபடி சிறு தொழில்  முயற்சியாளர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான ஒரு முன்மாதிரி வேலைத்திட்டமாக காணப்பட்டது என்று கூறினார்.

உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தொடர்ந்து கூறியபோது “இலங்கை சந்தித்துள்ள கடும் பொருளாதார நெருக்கடியில் மரக்கறி எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை அடைய இலங்கைக்கு முழுமையாக ஆதரவளிப்பதற்காக NEOM-OP உடன் இந்தியா தமது அனுபவங்கள் பற்றிய அதிகளவான தகவல்களை பகிர்ந்து கொள்வதில் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது எனவும் கூறியினார்.இதன் மூலம் ஏற்றுமதி வருவாய்களை பெற்று டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும் ,இலங்கையில் விவசாயத்துக்கு சாதகமான சூழல் காணப்படுவதாகவும், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் விவசாயத்தில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

POIASL பிரதிநிதிகள் குழு சந்திப்பானது திரு. V. கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றதுடன், பிராந்திய தோட்ட நிறுவனங்கள், பதப்படுத்தும் துறை மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.