உக்ரைன் படைகளை வீழ்த்தும் வல்லமை படைத்த அதிசய ஆயுதத்தை ரஷ்யா தேடி வருவதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கிண்டலடித்துள்ளார்.
5 கிலோமீட்டர் தொலைவிலேயே உக்ரைன் நாட்டு டிரோன்களை சுட்டெரிக்கும் லேசர் ஆயுதங்களையும், பூமியில் இருந்து 1,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செயற்கைகோள்களை கூட கண்காணிக்க விடாமல் செய்யக்கூடிய பெரஸ்வெட் (Peresvet) என்ற வான் தடுப்பு அமைப்பையும் களமிறக்கி உள்ளதாக ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிசோவ் (Yury Borisov) தெரிவித்திருந்தார். இந்நிலையில், தோல்வி பயத்தில் ரஷ்யா இவ்வாறு கூறி வருவதாக அதிபர் செலன்ஸ்கி விமர்சித்துள்ளார்.