கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வந்த உலக நாடுகள், சில மாதங்களுக்கு முன்பிருந்துதான் அதன் தாக்கத்தில் இருந்துதான்மெல்ல மெல்ல விடுப்பட்டு வருகின்றன. இதனால், மாதக்கணக்கில் பொதுமுடக்கம், ஊரடங்கு என்று இன்னல்களை அனுப்பவித்து வந்த உலக மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், உலக மக்களின் துக்கத்தை கெடுக்கு்ம் விதமாக மற்றொரு வைரஸ் நோய் தற்போது பரவ தொடங்கியுள்ளது. பிரிட்டனில் கடந்த வாரம் குரங்ரு அம்மை எனும் வைரஸ் தொற்று நோய் பரவியிருப்பது கண்டறியப்பட்டது.
பிரிட்டனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது
பிரிட்டன்
மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா… தக்காளி வைரஸ்… இப்போ குரங்கு அம்மை.. போதும்டா சாமி!
ஆப்பிரிக்காவில் திரும்பிய நபரிடமிருந்து இந்த தொற்று நோய் பரவி இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் ஸ்பெயின், போர்ச்சுக்கல் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும்
குரங்கு அம்மை
பரவி தொடங்கி உள்ளது உலக மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அமெரிக்காவில் ஒரு நபருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் 40க்கும் மேற்பட்டோருக்கு இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் மட்டும் 23 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.