உஷார்..! இந்த உணவுகளை மீந்துபோனாலும் மறுநாள் சூடாக்கி சாப்பிடாதீங்க..விஷமாக மாறுமாம்


 இன்றைய அவசர உலகில் நம்மில் பலர் சமைத்த உணவு மீந்துபோனால் அதை ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் சூடாக்கி சாப்பிடும் பழக்கம் பலரது வீட்டில் உள்ளது.

உண்மையில் இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.

அந்த வகையில் சில உணவுகளை சூடாக்கி சாப்பிடுவது உங்கள் உடல் நலத்திற்கே தீங்கு விளைவிக்கும். அவை என்னென்ன பார்க்கலாம்.  

உஷார்..! இந்த உணவுகளை மீந்துபோனாலும் மறுநாள் சூடாக்கி சாப்பிடாதீங்க..விஷமாக மாறுமாம்

  •  கீரை வகைகள், கேரட், முள்ளங்கி என அதிக நைட்ரேட்ஸ் நிறைந்த காய்கறிகளை மீண்டும் சுட வைக்கும்போது அது விஷமாக மாறும். குறிப்பாக கீரை வகைகளில் உள்ள இரும்புச் சத்து ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய விஷமாக மாறும். 
  •  வேகவைத்த சோற்றை மீண்டும் சூடுபடுத்தினால் பேசிலஸ் செரியஸ் என்னும் பாக்டீரியா விஷமாக மாறும்.
  • புரோட்டின் நிறைந்த முட்டையில் நைட்ரஜனும் அதிகமாக இருக்கும். அதை மறுமுறை சூடுபடுத்தினால் விஷமாக மாறும்.  
  •   சிக்கனை மறுநாளும் சாப்பிட நினைத்து ஃபிரிஜ்ஜில் வைத்து மறுநாள் சூடுபடுத்தி சாப்பிட்டால் நிச்சயம் அது சிக்கன் அல்ல விஷம். அதில் புரோட்டின் சத்து நிறைந்துள்ளதால் விஷமாக மாறும் அதேபோல் ஜீரண சக்தியையும் குறைத்துவிடும். அதேபோல் சிக்கனை அதிகளவிலான தீயில் சமைப்பதும் தவறு.  
  •   உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவற்றை அதிகமாக சூடுபடுத்தினால் அதில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் C, B6 ஆகிய நன்மை தரும் ஊட்டச்சத்துகள் கிருமிகளாக வளர்ந்து விஷமாக மாறும். 
  • மஷ்ரூமை சமைத்ததும் சுட சுட சாப்பிட்டு விடுவதுதான் நல்லது. இதில் உள்ள ஊட்டச்சத்து மற்றும் மினரல் சத்துகள் ஆபத்தாக மாறும். அஜீரணத்தை உண்டாக்கும். மேலும் அதில் உள்ள நைட்ரஜன் விஷமாக மாறும். 
  • ஆளிவிதை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய் மீண்டும் மீண்டும் சூடு படுத்துவது உகந்ததல்ல. எனவே அவற்றை சமைக்கும்போதும் சேர்த்துக்கொள்வது தவறு. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.