நியூயார்க்-”மேற்கத்திய நாடுகள், தேவைக்கு அதிகமாக கொரோனா தடுப்பூசிகளை வாங்கி குவித்ததை போல, உணவு தானியங்களையும் வாங்கி குவிக்கக் கூடாது,” என, ஐ.நா., கூட்டத்தில் நம் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் தெரிவித்தார்.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் மே மாதத்துக்கான கூட்டம், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.
விலை உயர்வு
அப்போது, சர்வதேச உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நம் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன் பேசியதாவது:அதிகரித்து வரும் செலவு கள், உணவு தானியங்கள் கிடைப்பதில் உள்ள சிரமம் ஆகிய இரட்டை சவால்களை உலகம் முழுதும் உள்ள ஏழை நாடுகள் எதிர்கொள்கின்றன. உணவுப் பொருட்கள் போதிய அளவு கையிருப்பு வைத்துள்ள இந்தியாவிலும் விலை உயர்கிறது. இதன் வாயிலாக உணவு தானியங்கள் பதுக்கப்படுவது தெளிவாகிறது. இதை நாம் அனுமதிக்க கூடாது.கொரோனா தடுப்பூசி வினியோகத்தின் போது, மேற்கத்திய நாடுகள் தங்கள் தேவைக்கு அதிகமாகவே தடுப்பூசிகளை வாங்கி வைத்துக் கொண்டன.
முதல் ‘டோஸ்’
இதனால், ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் முதல் ‘டோஸ்’ தடுப்பூசி கூட கிடைக்காமல் திண்டாடின. இந்த நிலை, உணவு தானியங்களிலும் தொடரக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement