மலையாள சினிமா நடிகை ரீமா கல்லிங்கல், சமீபத்தில் பலூன் மாதிரி இருக்கிற ஹிமாச்சல் பலூன் ஸ்லீவ் ஸ்லிட் உடையை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு அசத்தியுள்ளார். அதைவிட, இந்த ட்ரஸ்ஸின் விலையை அறிந்த நெட்டிசன்கள் மிரண்டு போயுள்ளனர்.
மலையாள சினிமா உலகமான மோலிவுட் நடிகை ரீமா கல்லிங்கல் சமீபத்தில் பலூன் மாதிரி இருக்கிற ஹிமாச்சல் பலூன் ஸ்லீவ் ஸ்லிட் உடையை அணிந்து எடுத்துக்கொண்ட படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தார். ரீமா கல்லிங்கல் பலுன் மாதிரி இருக்கிற உடை அணிந்திருந்த படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. வித்தியாசமான இந்த ஆடையின் விலை என்ன என்று எல்லோரும் கேட்க, ரீமா கல்லிங்கல் அணிந்திருந்த பலூன் ட்ரஸ்ஸின் உண்மையான விலை உண்மையில் நெட்டிசன்களை பிரமிக்க வைத்துள்ளது.
அவர் வெளியிட்டுள்ள படங்களில் ரீமா கல்லிங்கல் கையால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஹிமாச்சல் பலூன் ஸ்லீவ் ஸ்லிட் ஆடை அணிந்திருந்தார். பலூன் மாதிரி இருகிற இந்த ட்ரஸ்ஸின் விலை சுமார் 1 லட்சத்து 19 ஆயிரத்து 500 ரூபாய் என்றும் இந்த ஆடையை பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் ராகுல் மிஸ்ரா வடிவமைத்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
ரீமா கல்லிங்கல் நேற்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஹிமாச்சல் பலூன் ஸ்லீவ் ஸ்லிட் உடையில், தனது அழகான தோற்றத்தை வெளிப்படுத்தும் படத்தைப் பகிர்தார். தான் அணிந்துள்ள ஹிமாச்சல் பலூன் ஸ்லீவ் ஸ்லிட் ட்ரஸ் அணிந்துள்ள படம் குறித்து ரீமா கல்லிங்கல் குறிப்பிடுகையில், “நீங்கள் கலையை அணியும்போது” என்று குறிப்பிட்டுள்ளார். மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் பலூன் மாதிரி வித்தியாசமாக அணிந்துள்ள இந்த ட்ரஸ் குறித்தும் அவருடைய அழகான தோற்றம் குறித்தும் ரசிகர்களும் பிரபலங்களும் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த மற்றொரு வித்தியாசமான ட்ரஸ் அணிந்து ரீமா கல்லிங்கல் வெளியிட்ட படத்துக்கு அவர் வண்ணத்துப்பூச்சிகளின் தாய் என்று குறிப்பிட்டுள்ளார்.
மலையாள சினிமாவில் ரீமா கல்லிங்கல் பிசியாக இருக்கிறார். இயக்குனர் ஆஷிக் அபுவின் ‘நீலவெளிச்சம்’ உள்ளிட்ட படங்களை கையில் வைத்துள்ளர். இந்த திகில் படத்தில், டோவினோ தாமஸ், ஷைன் டாம் சாக்கோ மற்றும் ரோஷன் மேத்யூ ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கிடையில், நடிகர் பத்ரன் இயக்கிய ‘ஜூதன்’ படமும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதில், நடிகர்கள் ஜோஜு ஜார்ஜ் மற்றும் சவுபின் ஷாஹிர் ஆகியோருடன் நடித்துள்ளார்.
இப்போது ரீமா கல்லிங்கல் அணிந்துள்ள பலூன் மாதிரி இருக்கிற ஹிமாச்சல் பலூன் ஸ்லீவ் ஸ்லிட் ட்ரஸ்தான் சமூக ஊடங்களில் மோலிவுட் ரசிகர்களின் டாக்காக இருக்கிறது. அதைவிட, அந்த ட்ரஸ்ஸின் விலை சுமார் 1 லட்சத்து 19 ஆயிரத்து 500 ரூபாய் என்பதன் மூலம் ரீமா கல்லிங்கல் அனைவரையும் மிரள வைத்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”