பாங்காக்,
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர், தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற, சூப்பர்-8 சுற்று போட்டியில், இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து தென்கொரிய வீராங்கனையான யூ ஜின் சிம்மை எதிர்த்து மோதினார் .
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 21-16, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான அகானே யமாகுச்சியை சிந்து எதிர்கொள்கிறார்.
Related Tags :