உக்ரைனுக்கு இரண்டு போர் விமானங்களை வாங்க பாகிஸ்தான் கோடீஸ்வரர் முகமது ஜாஹூர் உதவி செய்துள்ளர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் ரஷ்யாவின் படையெடுப்பு தொடரும் நிலையில், பாகிஸ்தானிய கோடீஸ்வரரும், உக்ரைனின் ஆங்கில செய்தித்தாள் நிறுவனமான Kyiv Post-ன் முன்னாள் உரிமையாளருமான முகமது ஜாஹூர் (Mohammad Zahoor) உக்ரைனுக்கு 2 போர் விமானங்களை வாங்க உதவு வழங்கியதாக கூறப்படுகிறது.
ஜஹூரின் மனைவியும் உக்ரேனிய பாடகியான கமாலியா ஜாஹூர் (Kamaliya Zahoor), தனது கணவரும் மற்ற செல்வந்த நண்பர்களும் ரஷ்யாவிற்கு எதிரான போராட்டத்தில் உக்ரைனுக்கு அமைதியாக உதவி செய்து வருவதாகக் கூறினார்.
உக்ரைனின் விமானப்படைக்கு இரண்டு ஜெட் விமானங்களை வாங்குவதற்கு தனது கணவர் உதவியதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீன் பிடிப்பதில் உலக சாதனையை முறியடித்த 11 வயது பிரித்தானிய சிறுவன்!
இந்த உதவிகள் செய்யப்பட்டதை மறைத்ததுவிட்ட அவரது கணவர் முகமது, இப்போது இதைச் சொல்ல தனக்கு பச்சைக்கொடி காட்டினார் என்று கூறினார். அவர்கள் உக்ரைனுக்கு இரண்டு போர் விமானங்களை வழங்கினர் மற்றும் உக்ரைனுக்கு உதவினார்கள் என்று அவர் கூறினார்.
ரஷ்யா-உக்ரைன் போர் வெடித்ததில் இருந்து, உக்ரைனில் வசித்து வந்தவரும் ஜாகூர், உக்ரைன் குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதை உறுதி செய்ய வலியுறுத்தி வருகிறார்.
பாகிஸ்தானில் பிறந்த பிரித்தானிய தொழிலதிபரான ஜாகூர் நிதி திரட்டவும், பிரித்தானிய மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளுக்கு அகதிகளை வெளியேற்ற உதவவும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
உக்ரேனியர்களுக்கு பாதுகாப்பான வழியை உறுதி செய்வதற்காக அவர் அரச தலைவர்கள் மற்றும் பிற செல்வாக்கு மிக்க நபர்களை தொடர்ந்து சந்தித்து வந்தார்.