ரூ. 5 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. இன்னும் எவ்வளவு இழப்பு ஏற்படுமோ?

டெல்லி: ஈக்விட்டி முதலீட்டாளர்கள் இன்று காலை தொடக்கத்திலேயே பெரும் இழப்புகளை கண்டுள்ளனர். இன்று காலை தொடக்கத்திலேயே சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தை குறியீடுகள் பெரும் சரிவினைக் கண்டன.

சர்வதேச சந்தையின் எதிரொலியாக சென்செக்ஸ் 1154.78 புள்ளிகள் குறைந்து, 53,053.75 புள்ளிகளாக வர்த்தகமாகியது.

இது தொடர்ந்து வெளியேறி வரும் முதலீடுகள் மற்றும் கச்சா எண்ணெய் விலையேற்றம் என பலவும் சந்தையில் தாக்கத்தின் மத்தியில் சரிவினைக் கண்டது.

பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கான அலர்ட்.. கெமிக்கல் பங்கு குறித்து அட்டகாசமான பரிந்துரை..!

 5 லட்சம் கோடி அவுட்

5 லட்சம் கோடி அவுட்

இதற்கிடையில் இன்று காலை தொடக்கத்தில் சந்தையில் இருந்து 5,02,731.03 கோடி ரூபாய் சந்தை மூலதனம் குறைந்து, 25,074,714.78 கோடி ரூபாயாக பிஎஸ்இ-ல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு சரிவினைக் கண்டுள்ளது. ஜூன் 2020-க்கு பிறகு பணவீக்க அச்சம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க சந்தைகளும் கடந்த அமர்வில் மோசமான சரிவினைக் கண்டுள்ளன.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

கடந்த அமர்வில் இந்திய பங்கு சந்தையில் இருந்து 1254.64 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வெளியேறியுள்ளன. இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 1.63% அதிகரித்து, 110.89 டாலர்களாக வர்த்தகமாகியும் வருகின்றன. இது இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இன்னும் பணவீக்கத்தினை தூண்டலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரம்
 

தற்போதைய நிலவரம்

1.58 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1281.71 புள்ளிகள் குறைந்து, 52,926.82 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது. இதே நிஃப்டி 388.3 புள்ளிகள் குறைந்து, 15,852 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

இதற்கிடையில் இன்று அனைத்து குறியீடுகளும் சரிவிலேயே காணப்படுகின்றன.

 பங்குகள் நிலவரம்

பங்குகள் நிலவரம்

நிஃப்டி குறியீட்டில் ஐடிசி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மகேந்திரா, ஹெச் சி எல் டெக், ஜே எஸ் டபள்யூ ஸ்டீல் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

இதே சென்செக்ஸ் குறியட்டில் ஐடிசி, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ் டாப் கெயினராகவும், இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மகேந்திரா, ஹெச் சி எல் டெக், ஜே. எஸ்.டபள்யூ ஸ்டீல் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Investors lost Rs 5 lakh crore in this morning’s session

The Indian stock market witnessed a sharp decline early this morning. Meanwhile, investors lost Rs 5,02,731.03 crore.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.