மத்திய, மாநில அரசுக்கும் சமமான உரிமை உண்டு.. ஜிஎஸ்டி வழக்கில் சுட்டிக்காட்டப்பட்ட 246A, 279A..!

ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளுக்குக் கட்டுப்படாது என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மீது சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்குச் சமமான அதிகாரம் உள்ளது என்றும், ஜிஎஸ்டி கவுன்சில் தான் தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் இன்று கூறியுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு எதிரொலி.. ஜிஎஸ்டி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு!

கடல்வழி போக்குவரத்துக் கட்டணம்

கடல் வழியாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்துப் பல இறக்குமதியாளர்களுடன் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் போராடி வருகிறது.

ஐஜிஎஸ்டி

ஐஜிஎஸ்டி

இது தொடர்பாகக் கடல் வழி சரக்கு போக்குவரத்து மீதான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) அரசியலமைப்புக்கு முரணானது என்று குஜராத் உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிபதி டிஒய் சந்திரசூட்
 

நீதிபதி டிஒய் சந்திரசூட்

ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளுக்கு நாடாளுமன்றம் நம்பிக்கையூட்டும் வகையில் மதிப்பு அளிக்கும் என்று மத்திய அரசுக்கும் மோஹித் மினரல்ஸ் நிறுவனத்திற்குமான வழக்கு விசாரணையின் போது நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று கூறியுள்ளது.

ஓன்றிய அரசு மாநில அரசு

ஓன்றிய அரசு மாநில அரசு

ஜிஎஸ்டி கவுன்சில் அரசியல் போட்டிகளின் ஒரு பகுதியாகவும், அது கூட்டாட்சி முறையைப் பாதிப்பதைக் கவனித்த நீதிபதி டிஒய் சந்திரசூட் “ஜிஎஸ்டி தொடர்பான சட்டமியற்றுவதற்கு ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஒரே நிலையான அதிகாரங்கள் உள்ளன. ஜிஎஸ்டி கவுன்சில் இணக்கமான முறையில் செயல்படக்கூடிய தீர்வை அடைய வேண்டும்,” என்று தெரிவித்தார்.

246A மற்றும் 279A

246A மற்றும் 279A

அரசியலமைப்பின் 246A மற்றும் 279A ஆகியவற்றை மேற்கோள் காட்டி நீதிபதி சந்திரசூட், 246A சட்டம் மாநில அரசையும், ஓன்றிய அரசையும் சமமாக நடத்துகிறது என்றும், 279A மாநில அரசும் ஓன்றிய அரசும் ஒன்றையொன்று சாராமல் செயல்பட முடியாது என்றும் கூறுகிறது. இது கூட்டாட்சி முறையின் போட்டித்தன்மையைச் சுட்டிக்காட்டுகிறது என்று நீதிபதி தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gst ஜிஎஸ்டி

English summary

Parliament and state possess equal powers to legislate on GST; 246A, 279A is talk of town now

Parliament and state possess equal powers to legislate on GST; 246A, 279A is talk of town now. what is 246A, what is 279A

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.