கடலூர் மாவட்டத்தில் செயல்பாட்டில் இல்லாத தொழிற்சாலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
பெரியகுப்பம் மற்றும் காயல்பட்டு பகுதியில் , தானே புயலால் பாதிக்கப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. செயல்பாட்டில் இல்லாத இந்த தொழிற்சாலையிலுள்ள பலகோடி ரூபாய் மதிப்புள்ள தளவாட சாமான்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் செல்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தொழிற்சாலைக்கு மர்ம நபர்கள் சிலர் தீவைத்ததால் நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது.தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்த நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.