பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து எல்லைப் பாதுகாப்பு பிரச்சினை குறித்து பேச்சு நடத்தினார்.
எல்லையில் டிரோன்கள் நடமாட்டம், பாசுமதி அரிசி மீது குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
மாநிலத்தில் அமைதியைக் குலைக்க சில சமூக விரோத சக்திகள் முயற்சிப்பதால் 2000 துணை ராணுவப் படைகளை பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்படுவதாக தெரிவித்த அவர், கூடுதலான படைகளை அனுப்பி வைக்குமாறு அமித் ஷாவிடம் கேட்டதாகத் தெரிவித்தார்.
சுமார் ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் பஞ்சாபுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக பஞ்சாப் முதல்வர் தெரிவித்தார்.