மதுரையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இளம்பெண்களை ஏமாற்றிய 2பேர் கைது செய்யப்பட்டனர்.
கே.புதூரைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான அனுப்பானடி கவிபாலனுடன் பழக்கம் ஏற்பட்டு நெருங்கிப் பழகியுள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், மாணவி அளித்த புகாரின் பேரில் கவிபாலன் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதாக மதுரை முகமது பைசல் என்பவ ர் மீது புகார் கொடுத்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.