தமிழீழ விடுதலை புலிகளுக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்ட மூத்த அரசியல்வாதி பழ நெடுமாறனை தி.மு.க.வினர் சில தற்போது விமர்சிக்க தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலையுடன் பங்கேற்ற பழ.நெடுமாறன் இலங்கையில் ராஜபக்சே விவகாரம் குறித்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென பாஜக தலைவர் அண்ணாமலையை புகழ்ந்து பேச தொ்டங்கிய அவர்.
இலங்கை விவகாரம் சர்வதேச பிரச்சினையாக வாய்ப்புள்ளது. சீனா இலங்கையில் ஆழமாக காலுன்றியுள்ளர். இலங்கை பிரச்சினையை எப்படி கொண்டுசெல்ல வேண்டுமோ அப்படி ஆழமான புரிந்துகொண்டு பேசினார் பாஜக தலைவர் அண்ணாமலை. அவர் ஐஏஎஸ் என்று கேள்விப்பட்டேன். ஆனால் வெளியுறவுத்தறை அதிகாரி போல் இலங்கை பிரச்சினை குறித்து தெளிவான புரிதலுடன் பேசியுள்ளார்.
ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி செயல்பட்டு வருகிறார் அண்ணாமலை. அவருக்கு பெருந்தன்மையும் பொறுமையும் அதிகமாக உள்ளது. அதேபோல் பிரதமர் மோடி ராஜதந்திரம்மிக்க தலைவர். தமிழர் சிங்களர் என வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் உதவி செய்கிறார். என்று புகழ்ந்து பேசியுள்ளார்.
பழ நெடுமாறனின் இந்த பேச்சு திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தில் இலங்கை பிரச்சினை குறித்து பேசாமல் பாஜக மோடி அண்ணாமலை ஆகியோரை புகழ்ந்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திமுகவுக்கும் பழ நெடுமாறனுக்கும் நெருக்கம் இல்லை என்றாலும் இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு என தமிழகர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக தனது எதிர்ப்பை கடுமையாக பதிவு யெ்து வருவதால் திராவிட கட்சிகளிடம் நன்மதிப்பை பெற்றிருந்தார்.
ஆனால் சமீப காலமாக தி.மு.க. மற்றும் அதிமுகவை அதிகமாக வமர்சித்துக்கொண்டிருக்கும் அண்ணாமலையை புகழ்ந்து பேசி திராவிட கட்சிகளின் அதிருப்தியை சம்பாதித்துள்ளார். இது குறித்து திமுக வெளிநாடு வாழ் இந்தியர்கள் செயலாளராக அப்துல்லா கூறுகையில், தமிழ் தேசியம் என்பது ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய செல்லக்குழந்தை என்று நாங்கள் சொன்போது மறுத்தவர்கள் இப்போது என்ன சொல்வார்கள் அது இப்போது உருதியாவிட்டது என்று கூறியுள்ளார்.
தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பணியாற்றிய பழ நெடுமாறன். தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்து இந்துத்துவா போக்கை கடுமையாக எதிர்ப்பவராக பழ நெடுமாறன் தற்போது திராவிட கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“