இவ்வளவு எளிமையா..? நெட்டிசன்களை வியக்கவைத்த ரத்தன் டாடா..! #Legend

இந்தியாவின் பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள் முதல் சமீபத்தில் யூனிகார்ன் நிலையை அடைந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிறுவனர்கள் வரையில் தங்களிடம் இருக்கும் பணத்தின் மூலம் ஆடம்பரத்தின் உச்சத்தில் ராஜ வாழ்க்கையை வாழ்ந்து வரும் நிலையில் ஒருவர் மட்டும் மிகவும் எளிமையாகவும், தன்னடக்கத்துடனும் இருப்பது அதிசயம் தான்.

அவர் தான் ரத்தன் டாடா….

700% லாபம் கொடுத்த டாடா குழும பங்கு.. எவ்வளவு காலத்தில்.. இனி எப்படியிருக்கும்?

டாடா குழுமம்

டாடா குழுமம்

டாடா குழுமம் போன்ற மிகப்பெரிய வர்த்தகக் குழுமத்தைப் பல ஆண்டுகளின் கடும் உழைப்பில் இன்று 108 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமான உருவாக்கிய ரத்தன் டாடா நினைத்திருந்தால் எப்படி வேண்டுமானாலும் ஆடம்பரமாக வாழ்ந்திருக்க முடியும். ஆனால் மிகவும் எளிமையாக உள்ளார்.

ரத்தன் டாடா

ரத்தன் டாடா

குறிப்பாகத் தற்போது வெளியாகியுள்ள வீடியோ மூலம் ரத்தன் டாடா மீதான மரியாதை மற்றும் மதிப்பு பல கோடி இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அப்படி என்ன வீடியோ என்று தானே கேட்கிறீர்கள் வாங்க பார்க்கலாம்.

தாஜ் ஹோட்டல்
 

தாஜ் ஹோட்டல்

டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் மும்பை தாஜ் ஹோட்டலுக்குத் தனது நேனோ காரில் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா வரும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவான சில நிமிடத்தில் இந்தியா முழுவதும் வைரலாகத் துவங்கியுள்ளது.

 1 பில்லியன் டாலர்

1 பில்லியன் டாலர்

டாடா குழும சொத்துக்கள் அனைத்தும் குடும்ப டிரஸ்ட் அமைப்புக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ரத்தன் டாடா தனது சொந்த முதலீட்டு வாயிலாகச் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை கொண்டு உள்ளார். இதுமட்டும் அல்லாமல் இவரிடம் ஜாகுவார் முதல் பெராரி வரையில் பல ஆடம்பர கார்கள் உள்ளது.

டாடா நேனோ கார்

டாடா நேனோ கார்

ஆயினும் அவர் நேனோ கார் மூலம் மிகவும் எளிமையாக எவ்விதமான பரபரப்பும் இல்லாமல் தாஜ் ஹோட்டலுக்கு வந்துள்ளது பலரையும் கவர்ந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ரத்தன் டாடா உடுத்தும் உடை கூட காஸ்ட்லியானது இல்லை என்பது முக்கியமானது.

இன்ஸ்டா பதிவு

இன்ஸ்டா பதிவு

வெறும் 1 லட்சம் ரூபாயில் கார் கொடுக்க வேண்டும் என்ற யோசனைக்கு வித்திட்டது எது என்று விளக்கி பதிவிட்டார். இதேபோல் டாடா மோட்டார்ஸ் கிளை நிறுவனம் சமீபத்தில் ரத்தன் டாடாவுக்கு நேனோ எலக்ட்ரிக் கார் உருவாக்கி பரிசளித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Ratan Tata arrives to Taj Hotel in Tata Nano; netizens amazed by his simplicity, humbleness

Ratan Tata arrives to Taj Hotel in Tata Nano; netizens amazed by his simplicity, humbleness, many calls him a legend. What you gonna say after seeing this.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.