டெல்லி : டெல்லியில் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.வழக்கு விசாரணையின் மபோது, மாநில அரசு தனியாக வழங்கும் ரேஷன் திட்டத்தை வேண்டுமானால் வீடுகளுக்கு சென்று கொண்டு போய்க் கொடுக்கலாம். மத்திய அரசு வழங்கும் ரேஷன் தானியங்களை வழங்க இத்திட்டத்தை பயன்படுத்த முடியாது என்று கூறி திட்டத்தை ரத்து செய்தது.