புதுடெல்லி :
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் முகமது யாசின் மாலிக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் பயங்கரவாத , பிரிவினைவாத குற்றச்சாட்டுகளுடன் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டப்படி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் யாசின் மாலிக் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கவில்லை என தெரிவித்தார்.
இந்த நிலையில் யாசின் மாலிக் குற்றவாளி என என்.ஐ.ஏ. கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. அவர் மீதான தண்டனை விவரம் 25-ந் தேதி அறிவிக்கப்படும்.
இந்த வழக்கில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சையத்தும், ஹிஸ்புல் முஜா கிதீன் இயக்கத்தின் தலைவர் சை யத் சலா குதீனும் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.