இங்கு பாலியல் அடிமைகளாக கேரள செவிலியர்கள்! வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர் பேசிய வார்த்தையால் அவருக்கு நேர்ந்த கதி


கேரளாவில் இருந்து செவிலியர்கள் வளைகுடா நாடுகளுக்கு “பயங்கரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாக” அனுப்பப்படுகிறார்கள் என கருத்து தெரிவித்த நபர் வெளிநாட்டு பணியில் இருந்து நீக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

சிசுபலன் துர்கதாஸ் என்பவர் கேரளாவை சேர்ந்தவர் ஆவார். இவர் கட்டாரில் கணக்காளர் பணியில் இருந்தார். இதோடு மலையாளத்தை உலகளவில் ஊக்குவிக்கும் கேரள அரசின் முயற்சியான பிராந்திய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலும் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் துர்கதாஸ் கலந்து கொண்டார்.
அப்போது கேரளாவில் இருந்து செவிலியர்கள் வளைகுடா நாடுகளுக்கு “பயங்கரவாதிகளுக்கு பாலியல் அடிமைகளாக” அனுப்பப்படுகிறார்கள் என கருத்து தெரிவித்தார்.
இதோடு மதமாற்றம் தொடர்பிலும் சில சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டார்.

இங்கு பாலியல் அடிமைகளாக கேரள செவிலியர்கள்! வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர் பேசிய வார்த்தையால் அவருக்கு நேர்ந்த கதி

பேரறிவாளன் விடுதலை குறித்த தீர்ப்பு மற்ற 6 தமிழர்களுக்கும் பொருந்தும்! முக்கிய தகவல்

இந்நிலையில் செவிலியர்கள் சங்கம் அவருக்கு எதிராக புகார் அளித்தது.
இதையடுத்து துர்கதாஸ் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதோடு பிராந்திய ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும் துர்கதாஸ் நீக்கப்பட்டுள்ளதாக கட்டாரில் உள்ள மலையாள மிஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் கட்டாரில் உள்ள நர்சிங் அமைப்பு அவர் மீது தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுக்கக் கோரி, கேரள முதலமைச்சரிடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.