சீண்டிய ரசிகருக்கு மாளவிகா மோகனன் பதிலடி
பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மாளவிகா மோகனன். மாறன் படத்திற்கு பிறகு தமிழில் புதிய படங்கள் இல்லாததால் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வரும் மாளவிகா, தனது புதிய புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருவதோடு, ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்.
இந்நிலையில் ரசிகர்கள் உடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர், மாறன் படத்தில் தனுசுடன் நடித்த படுக்கையறை காட்சி எத்தனை முறை படமாக்கப்பட்டது என்று கேட்டார். அதற்கு, ‛‛இந்த கேள்வியை பார்க்கும்போது உங்களது மண்டைக்குள் இருக்கும் மோசமான எண்ணம் தான் தெரிய வருகிறது'' என பதிலடி கொடுத்துள்ளார் மாளவிகா.