இந்திய பால்பண்ணைத் தயாரிப்புகள் துறையின் வளர்ச்சியில் முழு நம்பிக்கை கொண்டிருக்கும் எஃப்எம்சிஜி பெருநிறுவனமான கவின்கேர், அதன் பிரபல டெய்ரி பிராண்டான கவின்ஸின் கீழ் அதிக புரதம் நிறைந்த சீஸ் (பாலாடைக்கட்டி) அறிமுகம் செய்யப்படுவதை இன்று அறிவித்திருக்கிறது. தூய்மையான பசும்பாலிலிருந்து தயாரிக்கப்படும் கவின்ஸ் சீஸ் அதிக ஆரோக்கியம் அளிக்கும் சிறந்த உணவுப்பொருளாக இருக்கிறது. ஸ்லைஸ், பிளாக் மற்றும் ஸ்பிரெட் என்ற மூன்று வடிவங்களில் கிடைக்கும் கவின்ஸ் சீஸ், தொடக்கத்தில் தமிழ்நாட்டு சந்தையில் அறிமுகமாகிறது. இப்புதிய தயாரிப்பின் அறிமுகத்தைக் கொண்டு நுகர்வோர் பிரிவில் இந்நாட்டின் முதல் மூன்று நிறுவனங்களுள் ஒன்றாக தனது நிலையை உயர்த்தவும் இந்த பிராண்டு திட்டமிட்டிருக்கிறது.
சந்தையில் தனது இருப்பை இன்னும் விரிவாக்கவும் மற்றும் பால் பண்ணைகள் தயாரிப்புகள் பிரிவில் வலுவான நிலையை கைவசப்படுத்தவும் உதவும் ஒரு முயற்சியாக யோகர்ட், வெண்ணெய் (பட்டர்) போன்ற அதிக தேவைப்பாடுள்ள குளிர்ச்சியான தயாரிப்புகள் பலவற்றையும் தயாரித்து சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மதிப்புக் கூட்டப்பட்ட பால்பண்ணைத் தயாரிப்புகளில் இந்த பிராண்டின் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியா முழுவதிலுமுள்ள அனைத்து முக்கிய சந்தைகளிலும் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவிற்கே உரிய வேறுபட்ட பல்வேறு சுவைகளில் சீஸ் தயாரிப்பை அறிமுகம் செய்யவும் இது திட்டமிட்டிருக்கிறது.
குளிர்ப்பதன நிலையில் வைக்கப்பட வேண்டிய தயிர், பன்னீர், வெண்ணெய் மற்றும் சூழல் வெப்பநிலையில் வைக்கக்கூடிய மில்க்ஷேக், ப்ரீமியம் மில்க் ஷேக், பட்டர்மில்க் (மோர்) மற்றும் லஸ்ஸி ஆகியவற்றை UHT வடிவத்தில் வழங்கி வரும் கவின்’ஸ், கவின்கேர் குழுமத்தின் உயர்தரமான டெய்ரி பிராண்டாக மிகப்பெரிய வளர்ச்சி பெற்றிருக்கிறது.
கவின்கேர் நிறுவனத்தின் இயக்குனர் – ரீடெய்ல், திரு. மனுரஞ்சித் ரங்கநாதன் இப்புதிய அறிமுகம் குறித்து கூறியதாவது: “கவின்’ஸ் அறிமுகத்தின் மூலம் எமது குளிர்ப்பதன தயாரிப்புகள் தொகுப்பை வலுப்படுத்துவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். கவின்கேர் குழுமத்திலிருந்து வெளிவருகின்ற சீஸ் சார்ந்த முதல் தயாரிப்பாக இது இருக்கிறது. தற்போது தமிழ்நாடு சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் இத்தயாரிப்பை இந்தியாவெங்கிலும் பிற முக்கிய சந்தைகளுக்கும் விரைவில் நாங்கள் எடுத்துச்செல்லவிருக்கிறோம். எமது பிராண்டுக்கு மிக வலுவான மற்றும் அதிக விசுவாசம் மிக்க நுகர்வோர் அடித்தளம் இருப்பதால் இப்புதிய தயாரிப்பின் அறிமுகத்தின் மூலம் இப்பிரிவில் தரவரிசையில் இடம்பெறும் முதல் மூன்று முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக வளர்ச்சிபெறுவோம் என்று நாங்கள் உறுதியாக எதிர்பார்க்கிறோம்.”
பிளாக் சீஸ் மற்றும் ஸ்பிரெட் சீஸ் ஆகிய இரண்டும் முறையே200 கிராம் பேக் அளவு ரூ.160-க்கும் மற்றும் 180 கிராம் பேக் அளவு ரூ.120-க்கும் சந்தையில் கிடைக்கும். ஸ்லைஸ் சீஸ்100 கிராம் பேக் அளவு ரூ.90-க்கும் மற்றும் 480 கிராம் பேக் அளவு ரூபாய். 400-க்கும் கிடைக்கும்.
கவின்’ஸ் குறித்து: கவின்கேர் நிறுவனத்தின் பால்பண்ணைச் சார்ந்த தயாரிப்புகள் அனைத்திற்குமான ஒரு பிராண்டாக கவின்’ஸ் இருக்கிறது. குளிர்ப்பதன வசதியில் வைக்கப்பட வேண்டிய UHT பால், தயிர், பன்னீர், வெண்ணெய் அல்லது சூழல் வெப்பநிலையில் வைக்கக்கூடிய மில்க்ஷேக், பட்டர்மில்க் (மோர்), லஸ்ஸி என பலதரப்பட்ட தயாரிப்புகள் கவின்ஸ் பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்படுகின்றன. தொடர்ச்சியான புத்தாக்கம் கவின்’ஸ் – ன் வலுவான அடித்தளமாக இருக்கும் நிலையில் உற்பத்தியில் சர்வதேச தரநிலைகள் பின்பற்றப்பட்டு, உயர்தரத்தோடு சிறப்பான தயாரிப்புகளை வழங்கும் ஒரு டெய்ரி பிராண்டாக இது பிரமாண்டமான வளர்ச்சி பெற்றிருக்கிறது.
கவின்கேர் பிரைவேட் லிமிடெட் குறித்து: கவின்கேர் பிரைவேட் லிமிடெட், தனிநபர் பராமரிப்பு, தொழில்முறை பராமரிப்பு, உணவுகள், பால்பொருட்கள், பானங்கள், சூழல் மற்றும் சலூன்கள் ஆகிய துறையில் தொழிற்பிரிவுகளைக்கொண்டு, ஒரு பன்முக செயல்பாடுள்ள ஒரு எஃப்எம்சிஜி பெருநிறுவனமாகும். இதன் பிராண்டுகள் தொகுப்பில் ஷாம்புகள் (சிக், மீரா, கார்த்திகா மற்றும் நைல்), ஹேர் வாஷ் பவுடர்கள் (மீரா மற்றும் கார்த்திகா), தேங்காய் எண்ணெய் (மீரா), ஃபேர்னஸ் கிரீம்கள் (ஃபேர் எவர்), டியோடரண்ட் மற்றும் டால்க் (ஸ்பின்ஸ்), ஊறுகாய்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் (ருச்சி, சின்னிஸ் & கார்டன்), ஹேர் கலர்ஸ் (இன்டிகா), ரீடெய்ல் சலூன் தயாரிப்புகள் (ராகா புரொஃபஷனல்), பானங்கள் (மா), பால் பொருட்கள் (கவின்ஸ்), மற்றும் பியூட்டி சலூன்கள் (கிரீன் டிரென்ட்ஸ் & லைம்லைட்) ஆகியவை அடங்கும். உடல்நலம் மற்றும் தூய்மை வகையினத்தில் தனது செயல்பாடுகளை சமீபத்தில் விரிவாக்கம் செய்திருக்கும் கவின்கேர், காய்கறிகள் மற்றும் பழங்களின் தூய்மை மற்றும் பாதுகாப்பிற்காக சாஃபூ (மற்றும் பல்வேறு மேற்பரப்புகள் மற்றும் சாதனங்களுக்கான தொற்றுநீக்கியான பாக்டோ-வி என தொற்றுநீக்கல் செய்து தூய்மைப்படுத்தும் தயாரிப்புகளின் அணிவரிசையை வழங்குகிறது.
இதன் முக்கியமான ஃபர்சனல் கேர் பிராண்டுகளின் கீழ் ஹேண்டு சானிடைசர்கள் மற்றும் லிக்விட் சோப்பு தயாரிப்புகளையும் கவின்கேர் வழங்கி வருகிறது. இதன் பெரும்பாலான பிராண்டுகள் அவைகளுக்குரிய தயாரிப்பு வகையினங்களில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிற பிராண்டுகளாகும். நவீன சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப திறன்கொண்ட ஒரு பிரத்யேக ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் மையமானது, இந்த பல்வேறு துறைகள் முன்னேற்றம் காண்பதற்கு தொடர்ந்து பெரிதும் உதவுகிறது. மிகப்பெரிய அளவில் சந்தையாக்கல் செய்வதற்கான யுக்திகளையும், அம்சங்களையும் மிகச்சரியாக புரிந்துகொண்டிருக்கும் இந்நிறுவனம், தேசிய அளவிலான சந்தையில் மிக வலுவாக காலூன்றி இருக்கிறது. “பேரார்வமும், பெருமகிழ்ச்சியும் கொண்ட பணியாளர்கள் வழியாக புத்தாக்கத்தை ஊக்குவித்து மக்களால் பெரிதும் விரும்பப்படும் பிராண்டுகளை உருவாக்குவதன் மூலம், தொழில்துறையின் வளர்ச்சியை விட கணிசமான அளவு இன்னும் சிறப்பாக நாங்கள் வளர்ச்சி காண்போம்” என்ற தனது கார்ப்பரேட் செயல்நோக்கம் மற்றும் திட்டத்தின் மீது வலுவான அடித்தளத்தை அமைத்திருப்பதே கவின்கேரின் வெற்றிக்கு காரணமாகும்.