இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளவும், ஊழியர்களுக்கு நெகிழ்வு தன்மையை அளிக்கவும் மெட்ரோ அல்லாத நகரங்களிலும் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகின்றன.
இது ஏற்கனவே இருக்கும் அலுவலகங்களை விரிவாக்கம் செய்தும், புதியதாக அலுவலகங்களை தொடங்கியும் வருகின்றன.
அந்த வகையில் ஹனிவெல் டெக்னாலஜி சொல்யூசன்ஸ் நிறுவனம், மதுரையில் உள்ள தனது செயல்பாட்டினை விரிவாக்கம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. இனி சேலம், திருச்சி, மதுரை-க்கு கொண்டாட்டம்..!
20 ஆண்டுகளாக சேவை
இந்த நிறுவனம் ஏற்கனவே மதுரையில் 20 ஆண்டுகளாக சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிய தாக திட்டமிடப்பட்டுள்ள முதலீடுகள் புதிய ஆய்வகங்கள், உபகரணங்களில், பொறியியல் திறன் என பலவற்றிலும் முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம் விண்வெளி, கட்டிட மேலாண்மை தொழில் நுட்பங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் என தெரிவித்துள்ளது.
மதுரைக்கு முக்கியத்துவம்
ஹனிவெல் உலகளாவிய உயர்தர தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தினை மதுரையில் நிறுவிய முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகும். ஹனிவெல்லின் தற்போதைய பணியாளர்களில் 90% உள்ளூரை சேர்ந்த பொறியாளர்களாகும். மதுரை மையமானது உள்ளூர் திறமைகளை வளர்க்க உதவுவதோடு, வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது.
ஊழியர்கள் திறமையானவர்கள்
மதுரையில் உள்ள ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், Natural Language Processing உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் என பலவற்றிலும் மிக திறமையானவர்கள்.
ஆரம்பத்தில் 2002ல் வெறும் பயிற்சி மையமாக தொடங்கப்பட்டது. ஆனால் மதுரையில் திறமை மிகு ஊழியர்கள் உள்ளதை உணர்ந்த பின்னர், தற்போது தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றது. இங்குள்ள மூத்த அதிகாரிகள் சர்வதேச அளவிலான பணிகளில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
ஊழியர்கள் எண்ணிக்கை
ஹனிவெல் நிறுவனம் இந்தியாவில் சுமார் 5,000 ஊழியர்களை கொண்டுள்ளது. மேலும் இதில் 10% பொறியாளார்கள் மதுரையில் உள்ளனர். தற்போது மதுரையில் இந்த மையம் 1,31,000 சதுர அடியில் உள்ளது. இது தற்போது மேலும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இது மேற்கொண்டு வேலைவாய்ப்பினையும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியர்களுக்கு பெருமை
ஹனிவெல் நிறுவனம் பெங்களூரு, ஹைத்ராபாத் மற்றும் குருகிராமிகும் தனது செயல்பாட்டினை கொடுள்ளது. இந்தியாவில் உள்ள 4 மையங்களை தவிர, மெக்ஸிகோ, ப்ர்னோ உள்ளிட்ட இடங்களிலும் செயல்பட்டு வருகின்றது. உலகத்தின் வேறு செயல்பட்டு கொண்டிருந்தாலும், மதுரையில் தனது செயல்பாட்டினை விரிவாக்கம் செய்வது, இந்திய ஊழியர்களை பெருமைபடுத்தும் விதமாக வந்துள்ளது.
Honeywell technology solutions plans to expand in Madurai
Honeywell, which has been operating in Madurai for 20 years, now plans to expand its 1,31,000-square-foot center in Madurai.