வாரணாசியின் காசி விஸ்வநாதர் கோவிலின் நீட்சியாக சர்ச்சையைக் கிளப்பிய ஞானவாபி மசூதிக்குள் இந்து வழிபாட்டுச் சின்னங்கள் கிடைத்திருப்பதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்கள் மசூதிக்குள் வீடியோ படம்பிடித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது அங்கு சிவலிங்கம் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
அது சிவலிங்கம்தானா என்பது உறுதி செய்யப்படாத நிலையில் மேலும் சில இந்து அடையாளங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாரணாசி நீதிமன்றம் விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம் இன்று விசாரணையைத் தொடர உள்ளது.