ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம், ஏராளமானோர் பங்கேற்பு
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை ராமேஸ்வரம், மண்டபம், ஜெகதாபட்டினம், கோட்டைபட்டினம், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. இந்நிலையில், இலங்கை வசமுள்ள அனைத்து விசைப்படகு, நாட்டுபடகுகளை மீட்டுத்தரக் கோரியும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடற்கரை பகுதியில் 60 லட்சம் மீனவர்களை வெறும் வாக்கு வங்கிகளாக மட்டுமே அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 75 வருடங்களாக மீனவர்களுக்காக அரசியல் பிரதிநிதித்துவம் அரசியல் கட்சிகளால் மறுக்கப்பட்டு வருகின்றது. இதுவரை தமிழகத்தில் இருந்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே மீனவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் உள்ள மீனவர்களுக்கு, இலங்கை கடற்படை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு மீனவ பிரச்னைகளை அரசிடம் கொண்டு சேர்க்க மீனவர்களுக்கு சரியான அரசியல் பிரதிநிதித்துவம் இல்லை எனவே மீனவர்களுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அரசியல் கட்சிகள் ஒதுக்கீடு செய்து தர வலியுறுத்தி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM