ஒட்டன்சத்திரம் அருகே மினிவேன் மோதிய விபத்தில் இரண்டு இருசக்கர வாகனங்களில் சென்ற பெண் உள்பட மூவர் உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாராபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தங்கச்சியம்மாபட்டி வாய்க்கால் பாலம் அருகே நிலக்கோட்டையில் இருந்து பூக்கள் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்ற மினிவேன் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது மோதி நிலைதடுமாறி சாலையின் எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மீது கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தால் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த பெண் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒத்தையூரைச் சேர்ந்த கருப்புச்சாமி, ஹவுசிங் போர்டைச் சேர்ந்த சந்திரன் மற்றும் அவரது மனைவி சந்திரகலா ஆகிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM