திருப்பதி:
ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் கரிக்கபாடு பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
குண்டூரை சேர்ந்தவர் கிரேஸ் பாபு (வயது 19). இவர் குண்டூரில் அங்கு உள்ள என்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் சுரேஷ்பாபுவும், சிறுமியும் நட்பாக பழகி வந்தனர்.
இவர்களின் நட்பு காதலாக மாறியது. கிரேஸ் பாபுவுடன் படிக்கும் அவரது நண்பர்கள் ரிக்கி (19), மணிகண்டா (19). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் குண்டூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து மது குடித்தனர்.
அப்போது கிரேஸ் பாபு அதிக அளவில் மது குடித்ததால் மயக்கமடைந்தார்.
அவரது செல்போனை எடுத்த ரிக்கி சிறுமிக்கு போன் செய்து கிரேஸ் பாபு மயக்கமடைந்து விடுதி அறையில் உள்ளதாக தெரிவித்தார்.
சிறுமி கிரேஸ் பாபுவை பார்க்க வேண்டும் என அவரது நண்பர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து பைக்கை எடுத்துக்கொண்டு சிறுமி வீட்டிற்கு சென்ற ரிக்கி சிறுமியை தனது பைக்கில் விடுதி அறைக்கு அழைத்து வந்தார்.
அறைக்கு வந்து சிறுமிக்கு ரிக்கி அவரது நண்பர் மணிகண்டா இருவரும் வலுக்கட்டாயமாக வாயில் மதுவை ஊற்றினர். மது குடித்த சிறுமி மயக்கம் அடைந்தார். அப்போது ரிக்கி மற்றும் மணிகண்டா சிறுமியை பலாத்காரம் செய்தனர்.
வெளியே சென்ற சிறுமி நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சிறுமியை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி வந்தனர்.
இதற்கிடையே ரிக்கி, மணிகண்டா இருவரும் மயக்க நிலையில் இருந்த சிறுமியை பைக்கில் ஏற்றி வந்து அவரது வீட்டருகே போட்டு விட்டு சென்றனர்.
வீட்டின் அருகே மயக்கமடைந்த நிலையில் இருந்த சிறுமியை பார்த்த அவரது பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குண்டூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
சிகிச்சைக்குப் பின்னர் மயக்கம் தெளிந்த சிறுமி தனக்கு நடந்த விபரீதம் குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து நல்லபாடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் ரிக்கி, மணிகண்டா ஆகியோரை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.