சென்னை: மே 21-ம் தேதி காவல் ஆணையர்கள், மண்டல ஐ.ஜி. களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரவுகளை ஒழிக்க மேற்கொண்ட நடவடிக்கைகள், தற்போதைய நிலவரம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கபட உள்ளது என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நடைபெற்ற கொலைகள் தொடர்பாக காவல்துறை எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் விபத்துகளை தடுக்க, சாலை பாதுகாப்பு தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.