ஏடிஎம் மையங்களில் கார்டு இல்லாமல், கட்டணம் இல்லாமல் பணம்.. ஆர்பிஐ!

ஏடிஎம் மையங்களில் கார்டு இல்லாமல் பணம் பரிமாற்றம் செய்யும் முறையை எல்லா ஏடிஎம்களிலும் வங்கிகள் நிறுவ வேண்டும் என ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளது.

அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் நிலையங்களிலும் யுபிஐ சேவையை ஏற்படுத்த, இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வசதி செய்து கொடுக்க வேண்டும் எனவும் ஆர்பிஐ கூறியுள்ளது.

ஏடிஎம் மையங்களில் கூகுள் பே,பேடிஎம் பயன்படுத்தி பணம் எடுப்பது எப்படி?

கட்டணம் கிடையாது

கட்டணம் கிடையாது

ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏடிஎம் பரிவர்த்தனைகளில் வாடிக்கையாளர்கள் யுபிஐ பயன்படுத்திடும் போது அதற்கான பணம் விநியோகம், தேசிய ஃபினான்சிய ஸ்விட்ச் கீழ் விநியோகிக்கப்படும்.

எனவே யுபிஐ மூலம் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் போது வங்கிகள் அதற்கு எந்த கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது என ஆர்பிஐ வலியுறுத்தியுள்ளது.

வரம்பு

வரம்பு

அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஏடிஎம் மையங்களில் 5000 ரூபாய் வரையில் மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்படும்.

டெபிட் கார்டு
 

டெபிட் கார்டு

இப்போது ஏடிஎம் மையங்களில் டெபிட் கார்டு பயன்படுத்தி பணம் எடுக்கும் போது 3 முதல் 5 முறை மட்டுமே இலவச பரிவர்த்தனைகள் அனுமதிக்கபப்டுகிறன்றன. கூடுதல் பரிவர்த்தனை செய்யும் போது 10 ரூபாய் + ஜிஎஸ்டி முதல் 20 ரூபாய் + ஜிஎஸ்டி வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் ஏடிஎம் மையங்களை பழுதுபார்க்கவும்,சேவையை மெறுகேற்றவும் வங்கிகள் பயன்படுத்தி வருகின்றன.

வங்கிகள் ஏற்குமா?

வங்கிகள் ஏற்குமா?

ஆர்பிஐ இலவசமாக யுபிஐ சேவை மூலம் பணம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என வங்கிகளுக்கு வலியுறுத்தினாலும், கட்டணம் இல்லாமல் வங்கிகள் இந்த சேவையை எப்படி அனுமதிக்கும் என்பது கேள்வியாக உள்ளது. ஆர்பிஐ வங்கிகளை வலியுறுத்த முடியுமே தவிர, உத்தரவிட முடியாது. எனவே இந்த இலவச பரிவர்த்தனை எப்படி சாத்தியம் என்பது கேள்வியாக உள்ளது.

ஏடிஎம் மையங்களில் யுபிஐ மூலம் பணம் எடுப்பது எப்படி?

ஏடிஎம் மையங்களில் யுபிஐ மூலம் பணம் எடுப்பது எப்படி?

படி 1: உங்கள் அருகில் உள்ள ஏடிஎம் மையத்தில் உள்ள திரையில் QR குறீயூடு / யுபிஐ பயன்படுத்தி பணத்தை எடுப்பதற்கான தெரிவை தட்டவும்.

படி 2: ஏடிஎம் திரையில் QR குறியீடு காண்பிக்கப்படும். அதை உங்கள் மொபைலில் உள்ள யுபிஐ செயலிகள் உதவியுடன் ஸ்கான் செய்யவும்.

படி 3: ஸ்கான் செய்த பிறகு உங்களுக்கு எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்பதை உள்ளிட்டு யுபிஐ பின்னை அளிக்கவும். உடனே ஏடிஎம் இயந்திரம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணத்தை டெபிட் செய்து உங்களுக்கு ரொக்கமாக வழங்கி விடும்.

யுபிஐ பரிவர்த்தனை

யுபிஐ பரிவர்த்தனை

இந்தியாவில் செய்யப்படும் சில்லறை பரிவர்த்தனைகளில் 60 சதவீதம் யுபிஐ செயலிகள் மூலமாகத்தான் நடைபெறுகிறது. அதில் 75 சதவீதம் 100 ரூபாய்க்கும் குறைவான தொகை கொண்ட பரிவர்த்தனைகள். மார்ச் மட்டும் யுபிஐ செயலிகள் மூலம் 9.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் இது தொடர்ந்து அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

RBI Asks All Banks And ATMs Should Allow cardless cash withdrawals

RBI Asks All Banks And ATMs Should Allow cardless cash withdrawals | ஏடிம் மையங்களில் கார்டு இல்லாமல், கட்டணம் இல்லாமல் பணம்.. அர்பிஐ!

Story first published: Friday, May 20, 2022, 14:08 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.