பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பான இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க, விசாரணைக் குழுவுக்கு மேலும் 4 வாரகாலம் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பெகாசஸ் விவகாரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 29 செல்போன்களை ஆய்வு செய்துள்ள வல்லுநர் குழு, அதன் அறிக்கையை மே மாத இறுதிக்குள் சமர்பிக்க உள்ளதாகவும், அதனைத்தொடர்ந்து பெகாசஸ் விவகாரம் தொடர்பான இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையிலான ஆய்வுக்குழு தெரிவித்தது.
இதனையேற்ற உச்சநீதிமன்றம், வரும் ஜூன் 20-ம் தேதிக்குள் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.