இந்தியாவில் அழகு பராமரிப்பும், ஆயுர்வேதமும் எப்போதும் இணைந்து இருக்கின்றன. சந்தையில் ஏராளமான தோல் பராமரிப்பு பொருட்கள் இருந்தாலும், நம்மில் பலர் பழமையான வீட்டு வைத்தியத்தை தான் விரும்புகிறோம்.
நாம் அனைவரும் ஆரோக்கியமான சருமத்திற்கான இயற்கை வைத்தியங்களான கடலை மாவு, முல்தானி மட்டி, உலர்ந்த பூ இதழ்கள், வேப்ப இலைகள் மற்றும் பலவற்றை முயற்சித்திருப்போம்.
ஆயுர்வேத மருத்துவர் அபர்ணா பத்மநாபன், இங்கு குறுகிய நேரத்திலும் சில எளிய படிகளிலும் தயாரிக்கக்கூடிய எளிய, ஆயுர்வேத ஃபேஸ் பேக்குகளின் பட்டியலைப் பகிர்ந்துள்ளார்.
தயிர் மற்றும் கொண்டைக்கடலை ஃபேஸ் பேக்
* தயிர் 1 தேக்கரண்டி
*கடலை மாவு 1/4 தேக்கரண்டி
*மஞ்சள் சிட்டிகை
*அனைத்தையும் நன்கு கலந்து முகத்தில் தடவவும்
*10 நிமிடங்கள் அப்படியே விடவும்
* வெதுவெதுப்பான நீரில் கழுவவும்
தேன் மற்றும் கொண்டைக்கடலை ஃபேஸ் பேக்
*தேன் 1 தேக்கரண்டி
*கடலை மாவு ½ தேக்கரண்டி
*மஞ்சள் சிட்டிகை
*மூன்றையும் நன்கு கலந்து முகத்தில் தடவவும்
*10 நிமிடங்கள் அப்படியே விடவும்
* வெதுவெதுப்பான நீரில் கழுவவும்
ஓட்ஸ் மற்றும் பால் பேஸ்பேக்
*ஓட்ஸ் மாவு
* பால் (மென்மையான நிலைத்தன்மைக்கு)
*கலந்து முகத்தில் தடவவும்
* பாதி காய்ந்ததும் கழுவவும்
முழு கோதுமை மற்றும் பால் ஃபேஸ் பேக்
* முழு கோதுமை மாவு 1 தேக்கரண்டி
*பால்/பாதாம் பால்
* நன்கு பேஸ்ட் போல் கலக்கவும்
*முகத்தில் தடவி 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்
* வெதுவெதுப்பான நீரில் கழுவவும்
இந்த குறிப்புகளை முயற்சி செய்து, ஒளிரும், ஆரோக்கியமான சருமத்திற்கு வணக்கம் சொல்லுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“