ஓராண்டு சிறைத் தண்டனை பெற்ற நவஜோத் சிங் சித்து, மருத்துவக் காரணங்களால் சரணடையக் கூடுதல் காலக்கெடு கோரியதை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
1988ஆம் ஆண்டு பாட்டியாலாவில் சாலைத் தகராறில் சித்து ஒருவரை வாகனத்தில் இருந்து வெளியே இழுத்துக் கையால் குத்தியதில் அவர் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில் சித்துக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தது.
மருத்துவக் காரணங்களால் நீதிமன்றத்தில் சரணடைவதற்குக் கூடுதல் காலக்கெடு கோரிச் சித்து சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று முறையிடப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.