பஞ்சாப் மாநிலம் மான்ஸா பகுதியில் மின் திட்டத்தில் பணிபுரிவதற்கு 263 சீனர்களுக்கு முறைகேடாக ஒரே மாதத்தில் விசா வாங்கி கொடுத்ததாகவும், அதில் 50 லட்சம் ரூபாய் பணம் பரிவர்த்தனை நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 9 இடங்களில் சோதனை நடத்திய நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனை சிபிஐ கைது செய்தது.
இந்த நிலையில், விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
சீனர்களுக்கு விசா வாங்கி தர 50 லட்சம் லஞ்சம் ருபாய் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், லண்டனில் இருந்தபடியே அவர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்
இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் இந்தியா திரும்பிய 12 மணி நேரத்துக்குள் சிபிஐ முன் ஆஜராக வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.