கடந்த சில மாதங்களாகவே இந்திய ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்தது. இதற்கிடையில் இந்திய ரூபாயின் மதிப்பானது, 7 பைசா அதிகரித்து, 77.46 ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது தொடக்கத்தில் 77.51 ரூபாயாக தொடங்கிய நிலையில், தற்போது சற்று அதிகரித்து காணப்படுகின்றது.
இதே டாலர் மதிப்பானது 0.29 சதவீதம் அதிகரித்து, 103.02 ஆக அதிகரித்துள்ளது.
சொந்த நிறுவனத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட அங்கிதி போஸ்.. சிங்கப்பூரில் நடந்தது என்ன..?
கச்சா எண்ணெய் விலை
இதே கடந்த அமர்வில் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு, 111.24 டாலர்களாக குறைந்துள்ளது. இது கிட்டதட்ட 1 சதவீதம் சரிவினைக் கண்டுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வந்த கச்சா எண்ணெய் விலையானது, சீனாவில் கொரோனா பரவலின் காரணமாக தேவை சரியலாம் என்ற எண்ணம் இருந்து வந்தது. எனினும் அங்கு தற்போது தளர்வுகள் அளிக்க தொடங்கப்பட்டுள்ளது.
சென்செக்ஸ் நிலவரம்
அதோடு சீனாவின் சரிந்துள்ள பொருளாதாரத்தினை மேம்படுத்த கடன்களுக்கான வட்டி விகிதத்தினை அரசு குறைத்துள்ளது. இதுவும் இன்று ஆசிய பங்கு சந்தைகள் ஏற்றம் காண வழிவகுத்துள்ளது.
இதற்கிடையில் சென்செக்ஸ் 1301.82 புள்ளிகள் அதிகரித்து, 54,094.05 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 393.15 புள்ளிகள் அதிகரித்து, 16,202 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
முதலீடுகள்
தொடர்ந்து அன்னிய முதலீடுகளானது வெளியேறி வந்த நிலையில், இந்திய சந்தையானது கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்தது. எனினும் கடந்த அமர்வில் மொத்தம் 4889.92 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
செல் ஆஃப்
எப்படியிருப்பினும் சந்தையில் நிலவி வரும் இந்த நெருக்கடியான நிலைக்கு மத்தியில், சன்டையில் செல் ஆஃப் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் அமெரிக்க டாலரின் மதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருவது கவனிக்க வேண்டிய விஷயங்களாக உள்ளது.
வளர்ச்சி மெதுவாகலாம்
தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனையானது மேற்கொண்டு வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்ற்து. இதன் ஆல் டைம் லோவானது 77.72 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
Indian rupee recover from hits 18 month low
Indian rupee appreciated by 7 paise to 77.46 against the dollar in early trade.