சிவகங்கையில் தந்தை இறந்த நிலையிலும் ப்ளஸ் டூ மாணவன் தேர்வு எழுதிய எழுதிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே காலனியைச் சேர்ந்தவர் டூவீலர் மெக்கானிக் முத்து (50). மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே டூவீலர் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள். இதில் மூன்றாவது மகன் சந்தோஷ்(11) தந்தையின் ஒர்க் ஷாப் எதிரே உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வருகிறார். இன்று காலை பொருளாதார (எக்னாமிக்ஸ்) தேர்வு நடைபெற இருந்த நிலையில் நள்ளிரவு வரை படித்துவிட்டு தந்தையின் அருகிலேயே தூங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது தந்தை தூக்கத்திலேயே உயிரிழந்தது கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
பின்னர் அங்கிருந்து சொந்த ஊரான டி. ஆலங்குளம் கிராமத்திற்கு தந்தையின் உடல் கொண்டு செல்லப்படும் நிலையில் சந்தோஷை மட்டும் உறவினர்கள் தேர்வு எழுதிவிட்டு வருமாறு இருவரை துணைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆசிரியர்களும் ஆறுதல் கூறி தேர்வு எழுத வைத்துள்ளனர். தேர்வு முடிந்த பின் சொந்த கிராமத்திற்கு மாணவன் சந்தோஷை தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்ய உறவினர்கள் அழைத்துச்சென்றனர். தந்தை இறந்த நிலையில் மாணவன் தேர்வு எழுதிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM