மும்பை:
மகராஷ்டிரா மாநிலம் சந்திரப்பூர் நகரின் அருகே உள்ள அஜய்பூர் அருகே மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி மீது டீசல் ஏற்றிக் கொண்டு வந்த டேங்கர் ஏதிர்பாரத விதமாக மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் தீப்பற்றியதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். விபத்தானது நேற்று இரவு 10.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்து ஏற்பட்ட இடத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு பின் சென்ற தீயணைப்புத்துறையினர் சில மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயிணை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் சந்தரப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.