ஜம்முவில் ஏற்பட்ட சுரங்கப்பாதை விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 9 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்

ஜம்முவில் ஏற்பட்ட சுரங்கப்பாதை விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 9 பேரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு, கனமழையால் புதிதாக கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி சரிந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளுக்கிடையே தொழிலாளர்கள் பலர் சிக்கினர்.

காயமடைந்த 3 பேர் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுரங்கப்பாதையின் முன் இருந்த எந்திரங்கள், வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.

இதனிடையே, இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. இந்நிலையில், எஞ்சிய 9 பேரை போர்க்கால அடிப்படையில் மீட்கும் பணியில் ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.