நொய்டாவில் அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்ட ஆறு வயது சிறுமியின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானமாக அளித்ததால் ஐந்து பேருக்கு வாழ்வு கிடைத்துள்ளது.
டெல்லி எய்ம்ஸ் வரலாற்றிலேயே குறைந்த வயதில் உறுப்புகள் தானம் செய்த பெருமை இந்த சிறுமிக்கு கிடைத்துள்ளது. ஹரிநாராயண் – பூனம் தேவியின் மகள் ரோலி என்ற சிறுமியை, அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டதில், அவரது தலையில் குண்டு பாய்ந்தது. இதில், அவர் மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து அவரது கல்லீரல், சிறுநீரகம், கண்கள், இதய வாழ்வு ஆகியவை தானமாக வழங்க பெற்றோர் ஒப்புக்கொண்டனர். இதன் மூலம் ஐந்து பேருக்கு வாழ்வு கிடைத்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM