போதும் பாதுகாப்பதை நிறுத்திவிடுங்கள்… துருப்புகளுக்கு உக்ரைன் உத்தரவு


 மரியுபோல் நகரை பாதுகாப்பதை நிறுத்துமாறு அதன் துருப்புக்களுக்கு உக்ரைன் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

பிப்ரவரி மாத இறுதியிலிருந்து உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, சமீபத்திய நாட்களாக போரில் பின்னடைவை சந்தித்துள்ளது.

எனினும், மரியுபோல், கெர்சன் நகரங்களை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது ரஷ்யா.

இந்நிலையில், மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் இருந்து பலத்த காயமடைந்த உக்ரைன் போராளிகள் மற்றும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதாக உக்ரைனின் அசோவ் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.

போதும் பாதுகாப்பதை நிறுத்திவிடுங்கள்... துருப்புகளுக்கு உக்ரைன் உத்தரவு

மரியுபோல் நகரத்திற்குள் கடைசி பெரிய கோட்டையாக கருதப்பட்ட இந்த ஆலையில் அசோவ் படைப்பிரிவு தளமாக கொண்டுள்ளது.

மிகவும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, வீரர்களின் உயிரைக் காப்பாற்றுமாறும், நகரத்தை பாதுகாப்பதை நிறுத்துமாறும் துருப்புகளுக்கு உக்ரைன் ராணுவ தளபதி உத்தரவிட்டுள்ளதாக அசோவ் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், ஆலையில் இருந்து இறந்த போராளிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது என குறிப்பிட்டுள்ளது.

மரியுபோல் போர் தொடங்கியதில் இருந்து புடினுடைய முக்கிய இலக்காக இருந்து வருகிறது. தொடர்ச்சியான மற்றும் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியில் சரமாரியான தாக்குதல்களுக்கு பிறகு நகரம் முற்றிலும் சீரழிந்துள்ளது.

போதும் பாதுகாப்பதை நிறுத்திவிடுங்கள்... துருப்புகளுக்கு உக்ரைன் உத்தரவு

பின்லாந்திற்கான எரிவாயு விநியோகத்தை நிறுத்தும் ரஷ்யா! 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.