மதுரையில் நடைபெற்ற கோவில் திருவிழாவில், 470 ஆடுகளை வெட்டி, ஆயிரக்கணக்கானோருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.
வெள்ளக்கல் – கழுங்குடி முனியாண்டி சாமி கோவில் 35வது ஆண்டுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இங்கு பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு நேர்த்திக்கடனாக முனியாண்டி சுவாமிக்கு ஆடுகளை பலியிடுகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டு வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் பூஜைகள் செய்யப்பட்ட பின் விடிய விடிய 470 ஆடுகள் வெட்டப்பட்டன. காலையில் அவை சமைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.