வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளில், நாடுகளின் தலைவர்கள் ஈடுபடத் தவறினால், உலக பொருளாதார வளர்ச்சி 1 – 5 சதவீதம் இழப்பை காணும் என, உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது: கால நிலை மாற்றம், கொரோனா பாதிப்பு, உக்ரைன் போர் ஆகியவற்றால், உலகில் பட்டினி அதிகரித்துள்ளது; அகதிகள் அதிகரித்துள்ளனர். மேலும் வினியோகத்தில் தடைகள், எரிபொருள் விலையேற்றம் போன்ற சிக்கல்கள் அதிகரித்து உள்ளன. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் உலக தலைவர்கள் இறங்காவிட்டால், உலக பொருளாதார வளர்ச்சி 1 – 5 சதவீதம் இழப்பை சந்திக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொருளாதார இழப்பை தடுக்கும் வகையில், ஒரு கூட்டமைப்பை, உலக பொருளாதார மையம் ஏற்படுத்தி உள்ளது. இதில் தலைவர்கள், மற்றும் தனியார் நிறுவனங்கள் சேர்ந்து செயல்பட்டு, வளர்ச்சியை தக்க வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Advertisement