மேற்கத்திய நாடுகளின் ராணுவ விரிவாக்கத்திற்கு எதிராக ரஷ்யா தனது ராணுவ தளங்களை நாட்டின் மேற்குப் பகுதி நகரங்களில் விரிவுப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் ரஷ்யா போரை தொடர்ந்து, ரஷ்யாவின் அண்டை நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்து அதுத் தொடர்பான விண்ணப்பத்தையும் சமர்பித்துள்ளனர்.
பின்லாந்து மற்றும் ஸ்வீடனின் இந்த முடிவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா தற்போது நாட்டின் மேற்கு எல்லைப் பகுதிகளில் புதிய ராணுவ தளங்களை கட்டமைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் தெரிவந்துள்ளன.
இது தொடர்பாக வெள்ளி கிழமை ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்த அறிவிப்பில், ரஷ்யாவை நோக்கிய மேற்கத்திய நாடுகளின் நோட்டோ ராணுவ விரிவாக்கத்திற்கு எதிராக தங்களது 12 புதிய ராணுவ தளங்களை ரஷ்யாவின் மேற்கு நகரங்களில் கட்டமைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: நிதியமைச்சர் இல்லாத புதிய அமைச்சரவை பொறுப்பேற்பு: இலங்கையில் தொடரும் குழப்பம்!
அத்துடன் இரண்டாயிரத்திற்கும் அதிகமான இராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை ராணுவ தளங்கள் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.