இந்திய அரசியலில் பி.கே. என்று சுருக்கமாக அழைக்கப்படும் தேர்தல் உத்தி வகுப்பாளர்
பிரசாந்த் கிஷோர்
,காங்கிரசில் இணைய உள்ளதாக சமீபத்தில் பேசப்பட்டது. அதன் பின்னர் அவர் அந்த முடிவை கைவிட்டு பிகாரில் தனி அமைப்பு தொடங்கி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டது.
இதுகுறித்து இன்னும் திட்டவட்டமான இறுதி முடிவை பி.கே. எடுக்காத நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் சிந்தினைக் கூட்டம் குறித்து அவர் இன்று ட்விட்டரில் பதிவி்ட்டுள்ளார்.
அதில் அவர், ‘உதய்பூரில் அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டம் பற்றி என்னிடம் பலர் கருத்து கேட்டு வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை, அந்தக் கூட்டத்தில் அர்த்தமுள்ளதான எந்த முடிவையும் எட்டவில்லை.
காங்கிரஸ் தற்போதைய நடைமுறையையே தொடர முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவிகளில் இன்னும் சிறிது காலம் நீடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குஜராத், இமாச்சலப்பிரதேச மாநில சட்டப்பரேவைத் தேர்தகளில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் வரையிலாவது இந்த நடைமுறை தொடரும்’ தமது ட்விட்டர் பதிவில் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.